This Article is From Jul 19, 2018

ஆர்.டி.ஐ சட்டத்தில் மாற்றம் கொண்டு வர முயலும் மத்திய அரசு… கொதிக்கும் எதிர்கட்சிகள்!

காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்கட்சிகள் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன

New Delhi:

ஆர்.டி.ஐ என்று சொல்லப்பட்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் நோக்கில், ‘தகவல் அறியும் (மாற்றம்) உரிமைச் சட்டம், 2018’-ஐ இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளது மத்திய அரசு. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு அறிவித்ததிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. தகவல் கொடுக்கும் கமிஷனர்களின் சம்பளம் மற்றும் பதவிக் காலத்தில் மாற்றம் செய்ய இந்த புதிய திருத்தத்தில் முயற்சி மேற்கொண்டுள்ளது மத்திய அரசு. தேர்தல் கமிஷனர்களுக்கு ஒப்பான சம்பளமும், 5 ஆண்டுகள் பதவிக் காலமும் தகவல் கொடுக்கும் கமிஷனர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ‘தேர்தல் ஆணையம் என்பது சட்ட சாசனம் வரையறுத்துக் கொடுத்தது. ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்காகத் தான், அதற்கான கமிஷனர்களின் பதவி உருவாக்கப்பட்டது. எனவே, அதை தேர்தல் கிமஷனுடன் ஒப்பிடக் கூடாது’ என்பது மத்திய அரசின் நிலைப்பாடாக இருப்பதாக தெரிகிறது. 

இதையடுத்து தான், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்கட்சிகள் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்தத் திருத்தம் குறித்த வரைவு கூட பொதுத் தளத்தில் தெளிவாக இல்லாததால், அது குறித்தும் கூட ஆர்.டி.ஐ விண்ணப்பம் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் கௌடா, ‘ஆர்.டி.ஐ சட்டத்தில் எந்த வித மாற்றத்தையும் காங்கிரஸ் எதிர்க்கும். அரசு அமைப்புகளை பாஜக அழித்து வருகிறது’ என்று குற்றம் சாட்டினார்.

.