2018ம் ஆண்டிலும் தனது சம்பளமாக 1.4 டாலரை தவிர மற்ற தொகைகளை மறுத்துவிட்டார்.
ட்விட்டர் சிஇஒ ஜாக் டோர்சே 2018க்கான சம்பளமாக 1.4 டாலரை வாங்கியுள்ளார். ட்விட்டரின் அமைப்புப்படி 140 எழுத்துக்கள் தான் என்பதால் ஒரு எழுத்துக்கு ஒரு சென்ட் விதம் 1.4 டாலர் சம்பளமாக பெற்றார். அதாவது மதிப்பில் 1.40 டாலர் ஆகும். 2017ல் டிவிட்டரில் பயன்படுத்தும் வார்த்தையின் அளவு 280 எழுதுக்களாக மாற்றப்பட்டால், ஜாக் டோர்சே சம்பளம் இரு மடங்காகும். ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார்.
ஜாக் டோர்சே, தனது நேரடி சம்பளங்களையும் மூன்று ஆண்டுகளாக மறுத்து வந்தார். 2018ம் ஆண்டிலும் தனது சம்பளமாக 1.4 டாலரை தவிர மற்ற தொகைகளை மறுத்துவிட்டார்.
ட்வீட்டரின் துணை நிறுவனரான இவர், நிறுவனத்தின் நீண்ட நாள் சொத்து உருவாக்கத்தை கருத்தில் கொண்டும், இதனை அவர் சிஇஒவாக தேர்வு செய்யப்பட்டதிலிருந்தும் செய்து வருவதாக ட்விட்டர் கூறியுள்ளது
டோர்சேவுக்கு ட்விட்டரில் 20 சதவிகித பங்குகள் உள்ளது. இப்படி ஒரு டாலர் சம்பளம் வாங்குவது ஒன்றும் புதிய விஷயமல்ல...
ஃபேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க், ஆல்ஃபபெட் சிஇஓ லாரி பேஜ் ஆகியோரும் ஒரு டலர் சம்பளமே வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.