ஷோவில் நடந்த நிகழ்ச்சியின் பதிவுகள்
அமெரிக்காவின் காட் டேலண்ட் (America's Got Talent) ஷோவில் அங்கிருந்த பார்வையாளர்களையும் நீதிபதிகளையும் பயத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்று விட்டனர் இந்தியர்கள். பிர் கசாலா குழுவினர் நடத்திய அபாயகரமான சாகச நிகழ்ச்சியில் அனைவரின் இதய துடிப்பையும் எகிற வைத்து விட்டனர்.
ஜெகதீப் சிங் மற்றும் காவாஜித் சிங் இருவரும் இணைந்து இந்த நிகழ்வை நடத்தினர். இதில் ஜெகதீப் படுத்துக்கொள்ள அவரைச் சுற்றி தேங்காய் மற்றும் தலைக்கு மேல் தர்பூசணிப் பழத்தையும் வைத்திருக்க, காவாஜித் சிங் முதலில் கண்ணை மூடி முகத்தில் உப்பைக் கொட்டி வைத்து பின் அதன்மீது துணியைக் கொண்டு கண்ணைக் கட்டிக் கொள்கிறார். பின் பெரிய இரும்பினால் ஆன சுத்தியலை எடுத்துக் கொண்டு ஜெகதீப் சிங் சுற்றிலும் உள்ள தேங்காய் மற்றும் தர்பூசணிப் பழத்தை உடைக்கிறார். இந்த காட்சியினைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர்.
அந்த வீடியோ காட்சியினை கீழே காணலாம்.
இந்த வீடியோ அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது. பலரும் இதைக் கண்டு அதிர்ந்து போய் உள்ளனர்.
Click for more
trending news