বাংলায় পড়ুন Read in English
This Article is From Jul 19, 2019

வெப்ப அலைத்தாக்கத்தை நிரூபிக்க வெயிலில் பிஸ்கட் பேக் செய்து காட்டிய வானிலை ஆய்வு மையம்

இந்த சோதனை மூலம் மக்களுக்கு கூடுதலான முன்னெச்சரிக்கைகள் விடப்பட்டன. காருக்குள் குழந்தைகளையோ அல்லது வளர்ப்பு பிராணிகளையோ விட்டுச் செல்ல வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தனர்.

Advertisement
விசித்திரம் Edited by

சனிக்கிழமை வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் இந்த சோதனை நடத்தப்பட்டது என்று ஃபாக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நெப்ராஸ்காவில் உள்ள தேசிய வானிலை சேவை மையம் வெப்ப அலைகளின் விளைவுகளை எடுத்துக் காட்ட புதுமையான பரிசோதனையில் நிரூபித்துள்ளது. 

வெயிலில் நிற்கும் காருக்குள் பிஸ்கட் மாவினை வைத்து அதை முழுமையாக பேக் செய்து காட்டியுள்ளனர். ஒமாஹாவில் உள்ள தேசிய வானிலை சேவை மையம் பிஸ்கட் பரிசோதனைகள் குறித்து உடனுக்குடன் ட்விட்டரில் தகவல் தெரிவித்துக் கொண்டே இருந்தது. சனிக்கிழமை வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் இந்த சோதனை நடத்தப்பட்டது என்று ஃபாக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது. 

ஒமாஹாவில் உள்ள அதிகபட்சம் 92 டிகிரியில் வெப்பக் குறியீடு 103 ஆக இருந்தது.

இன்று வெயிலின் தாக்கம் அதிகம் இருக்குமா என்று யோசிக்கிறீர்களா...? வாகன் நிறுத்துமிடத்தில் காரில் சூரியனின் வெப்பத்தை வைத்து மட்டுமே பிஸ்கட்டை பேக் செய்ய முயற்சிக்கிறோம் என்று தேசிய வானிலை மையம் தெரிவித்தது. அதில் நான்கு பிஸ்கட்டுகள் மாவாக ஒரு பேக்கிங் தட்டில் இருக்கும் படத்தை பகிர்ந்து கொண்டனர். 
 

45 நிமிடம் கழித்து பிஸ்கட் சற்று உப்பி பெரிசாகத் தொடங்கியது.

Advertisement

சில மணிநேரங்கள் கழித்து செட்டில் நிறுத்தப்பட்ட காரின் பின் சீட்டில் உள்ள வெப்ப அளவை குறிப்பிட்டு ட்விட்டரில் தெரிவித்தனர். 62 டிகிரி செல்சியஸ் இருந்தது.

பிஸ்கட் தங்க நிறமாக வரும் வரை பேக் செய்யப்பட்டது.

Advertisement

மேலும் சிலமணிநேரங்கள் கழித்து சோதனை வெற்றி பெற்றது என்றும், பேக்கான பிஸ்கட்டை புகைப்படத்தில் காட்டியிருந்தனர்.

8 மணிநேரம் கழித்து பிஸ்கட் சாப்பிடக்கூடிய அளவிற்கு தயாராகி விட்டது. நடுவில் மட்டும் கடினமாக இருந்ததாக எழுதியிருந்தனர். 

Advertisement

இந்த சோதனை மூலம் மக்களுக்கு கூடுதலான முன்னெச்சரிக்கைகள் விடப்பட்டன. காருக்குள் குழந்தைகளையோ அல்லது வளர்ப்பு பிராணிகளையோ விட்டுச் செல்ல வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தனர். 
 

Advertisement