This Article is From Sep 25, 2018

பிஷப் ஃபிரான்கோ முலக்காலுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

பிஷப் ஃபிரான்கோ (Bishop Franco Mulakkal), கோட்டயம் போலீஸ் க்ளப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டது

பிஷப் ஃபிரான்கோ முலக்காலுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

கோட்டயம் சப்-ஜெயிலில் பிஷப் ஃபிரான்கோ அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Kottayam:

கேரள கான்வெண்டில், கடந்த 2014 முதல் 2016 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து 13 முறை கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஷப் பிராங்க்கோ (Bishop Franco Mulakkal) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் கேரள உயர் நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை பிஷப் ஃபிரான்கோ பிணை கேட்டு தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் பிஷப் தரப்பில் மீண்டும் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை முதல் பிஷப் ஃபிரான்கோ, கோட்டயம் போலீஸ் க்ளப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டது.

பஞ்சாபின் ஜலந்தரில் இருக்கும் ரோமன் காத்தோலிக்க டியோசிஸ் சர்ச்சுக்கு தலைவராக இருக்கும் பிஷப் ஃபிரான்கோ, 3 நாள் விசாரணைக்கு பின்னர் கடந்த 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாதிரியார் பிராங்கே, கடந்த வியாழன் அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

.