This Article is From Oct 15, 2018

கன்னியாஸ்திரி பாலியல் வழக்கு: பாதிரியாருக்கு நிபந்தனை ஜாமின்!

அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Posted by

கன்னியாஸ்திரியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பிஷப் பிராங்கோவிற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. 

கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தர் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக அந்த கன்னியாஸ்திரி காவல்துறையில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

கைதுசெய்யப்பட்ட பாதிரியாரின் நீதிமன்ற காவல் கடந்த அக்.6ஆம் தேதியுடன் முடிந்த நிலையில், கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், அவர் ஆஜர்படுதப்பட்டார். அப்போது நீதிபதிகள், பாதிரியாரை அக்டோபர்.20 வரை நீதிமன்ற காவலில் வைக்க கோரி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக, ஏற்கனவே ஒரு முறை விசாரணைக் காவலில் உள்ள பாதிரியாருக்கு ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. 

Advertisement

இதைத்தொடர்ந்து, இன்று 2ஆவது முறையாக ஜாமின் கோரி தாக்கல் செய்யப்ட்ட மனுவில் பிஷப் பிராங்கோவை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement