Read in English
This Article is From Nov 02, 2018

தலைமுடியை வெட்டி மேக்கப் பிரஷ் செய்வது எப்படி? விசித்திரமான வீடியோ பதிவு!

வீடியோவில் தனது தலைமுடியை வெட்டி அதை வைத்து மேக்கப் பிரஷ்யை செய்வது எப்படி என குறிப்பிடபட்டுள்ளது

Advertisement
விசித்திரம்

அழகுக்கலை உலகம் என்பது மிகவும் பரந்து இருக்கும் ஒன்று. பயிற்சி வகுப்புகள் தற்பொழுது நேர்முக முறையிலோஅல்லது ஆன்லைனிலோ கற்க முடியும். நாளுக்குநாள் இதுபோன்ற வகுப்புகள் அதிகரித்துவரும் நிலையில், இந்த அழகு மோகம் சமீபகாலமாக அதன் உச்சத்திற்கு சென்றுள்ளது.

இணையதளங்களில் தற்போது பிரபலமாகிவரும் பயிற்சி வகுப்பு வீடியோக்கள், வீட்டுப்பொருட்களை வைத்தோ செய்வது எப்படி என்றம் வீட்டில் இருந்தபடி பிரபலங்களை போல் மேக்கப் செய்துகொள்ள வேண்டுமா? போன்ற தலைப்புக்களில் வருவது வழக்கமாகி விட்டது.

தற்போது வந்த வீடியோக்களில் ஒன்றான ‘டூயிட் யுவர் செல்ஃப்' என்ற தலைப்பில் வந்த வீடியோ மேக்கப் பிரஷ்யை வீட்டிலேயே செய்வது எப்படி என்ற தலைப்பில் வெளிவந்தது.

Advertisement

அவ்வீடியோவில் தனது தலைமுடியை வெட்டி அதை வைத்து மேக்கப் பிரஷ்யை செய்வது எப்படி என குறிப்பிடபட்டுள்ளது. 
 

பதற்றமாக உள்ளதா? எங்களுக்கும் அப்படிதான் இருக்கிறது. 

இன்ஸ்டாகிராமில் வெளிவந்த சில தினங்களில் ட்ரெண்டை கிளப்பிய இந்த வீடியோ, ட்விட்டரில் ‘வொர்ஸ்ட் டி.ஐ.யூ.' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. ‘5 மின்ட் கிராப்ட்ஸ்' என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த வீடியோவை, 15 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். மேலும்  பலர் இதை கண்டித்து கமென்ட்டுகளில்  திட்டியுள்ளனர். 

என்னதான் அழகுக்குறிப்பு என்ற பெயரில் இந்த வீடியோ பதிவு வெளியிடபட்டாலும், பெண்கள் ஏன் தங்களது தலைமுடியை வெட்டி மேக்கப் பிரஷ்ஷாக பயன்படுத்தபோகின்றனர் என்பது பலரின் கருத்து.

Advertisement

மார்கெட்டில் விலைகுறைந்த மேக்கப் பிரஷ்கள் பல உண்டு. இப்படி தலைமுடி வைத்து மேக்கப்செய்வது சேஃப் எனவும், ஆனால் அதற்கு தலைமுடியை எந்த  வித ரசாயணங்களும் கலக்காமல் இருப்பது அவசியம் என டீயின் வோகுக் ஒரு டர்மடாலஜிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement