வியாழன் இரவு காணப்பட்ட அந்த விண்கல்
சில தினங்களுக்கு முன் வானில் வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டை கண்டதாக பல விமானிகள் ஐரிஸ் ஏவியேஷன் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த நிலையில், அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் நகரில் கடந்த வியாழன் இரவு 9.22 மணிக்கு, வானில் எரி பந்தைபோல் வானில் இருந்து விழுந்த விண்கல் ஒன்றை அங்குள்ள கேமரா பதிவு செய்துள்ளது.
‘வானில் ராட்சத பந்தை போல் அந்த விண்கல் தெரிந்தது, முதலில் வானவில்லின் வர்ணங்களுடன் பிரகாசமாக காணப்பட்ட அந்த கல், பின்னர் டர்குயோஸ் (turquoise) நிறத்தில் மாறியது. நான் இது வரை பல வால் நட்சத்திரங்களை கண்டுள்ளேன் ஆனால் அது மிக பெரிதாகவும், வண்ணமயமாகவும் இருந்து' என இச்சம்வத்தை நேரில் கண்ட மேரி அன் மிரான் ஏ.பி.சி. செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
மேலும், அங்குள்ள மத்திய டெக்ஸாஸ் நகரை சேர்ந்த மக்களுக்கு பலத்த வெடி சப்தம் கேட்டதாக கூறினார்கள்.
அதிரவைக்கும் அந்த வீடியோ காட்சிகள்;
இதுவரை வானில் பெரிய விண்கல் ஒன்றை கண்டதாக சுமார் 95க்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததாக அமெரிக்கன் மீட்டியோர் சொஸையிட்டி தெரிவித்தது.
புகார்களுடன் கிரிஸ்டோபர் கேடோ என்பர் வீடியோ ஆதாரத்தையும் சமர்பித்ததாக கூறினார். நாஸா விண்கல் என்பது சூரிய குடும்பத்தில் உள்ள பல அஸ்டிராய்ட்ஸ் (Asteroids) பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்திடும்போது அந்த அஸ்டிராய்ட்ஸ்களில் பிளவுகள் ஏற்படும். இதைத்தான் நாம் விண்கல் என்போம் என தங்களது கருத்தை தெரிவித்தனர்.
Click for more
trending news