மேற்கு ஒடிசா மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
Bhubaneswar: சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நவீன் பட்நாய்க் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். லோக் சபா தேர்தலிலும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். நவீன் பட்நாயக் சொந்த ஊரான ஹின்ஞ்சிலி மற்றும் மேற்கு ஒடிசா பீஜப்பூர் மாவட்டத்தில் போட்டியிட்டு இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றார். இதன்பின் மேற்கு ஒடிசாவின் பீஜப்பூர் தொகுதியிலிருந்து பதவி விலகிக் கொண்டார்.
இந்த பதவி விலகலை பாஜக தேசிய செயலாளர் சுரேஷ் பூஜரி, மேற்கு ஒடிசாவை நவீன் பட்நாயக் கைவிட்டு விட்டதாக கூறி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு ஒடிசா மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த மாதம் நவீன் பட்நாயக் தன்னுடைய சட்டமன்றத் தொகுதியில் 34,000 குடும்பங்களுக்கு புக்கா வீடுகள் வழங்குவதற்கான திட்டங்களை அறிவித்தார். இதன் மதிப்பு 1,330 கோடி ரூபாய் ஆகும். பாஜகவினர் தொகுதி மக்களை ஏமாற்றவே இந்த அறிவிப்பு செய்துள்ளதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.