This Article is From Feb 13, 2019

'தமிழகத்தில் பாஜக கூட்டணி உறுதியாகி விட்டது' - ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் வெளியிட்டுள்ள தகவல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாஜக கூட்டணியில் எந்த கட்சியெல்லாம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

'தமிழகத்தில் பாஜக கூட்டணி உறுதியாகி விட்டது' - ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைலைட்ஸ்

  • பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது
  • விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்
  • அதிக தொகுதிகளை கைப்பற்றுவோம் என்கிறார் முரளிதர் ராவ்

தமிழகத்தில் பாஜக கூட்டணி உறுதியாகி விட்டதாக அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் பரபரப்பான தகவலை அளித்துள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வமாக கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

கூட்டணிக்கு பாஜக எப்போதும் திறந்த மனதுடன் இருக்கிறது. தமிழ்நாட்டில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.

கடந்த தேர்தல்களில் நாங்கள் கூட்டணி அமைத்தோம். அதில் வெற்றி கிடைத்தது. இந்த முறையும் வெவ்வேறு கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெகு விரைவில் எந்தக் கட்சிகளுடன் எல்லாம் கூட்டணி என்கிற விவரத்தை நான் அறிவிப்பேன். நிச்சயமாக கூட்டணி அமைத்துதான் தேர்தலை எதிர்கொள்வோம்.பெரும்பான்மை இடங்களை தமிழகத்தில் கைப்பற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

.