Read in English
This Article is From Jan 13, 2019

'உ.பி.-யில் வெற்றி பெறுவது கடினம்' - பாஜக கூட்டணி கட்சி புலம்பல்

உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியால் பாஜகவின் வெற்றி வாய்ப்பு குறைந்துள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.

Advertisement
இந்தியா

தனித்து போட்டியிடும் அளவுக்கு எந்தக் கட்சியிடமும் பலம் இல்லை என்கிறார் ஓம் பிரகாஷ்

Ballia, Uttar Pradesh:

உத்தரப்பிரதேசத்தில் அமைந்திருக்கும் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியால் வெற்றி பெறுவது கடினமாகி விட்டதாக பாஜகவின் கூட்டணி கட்சியான சுல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலில் முக்கிய திருப்பமாக யாரும் எதிர்பாராத வகையில், சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜும் கூட்டணி அமைத்துள்ளன. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் களம் காண்கின்றன.

இந்த கூட்டணியில் காங்கிரஸ் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ளது. கடந்த மக்களவை தேர்தலின்போது 72 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. அப்போது சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் எதிர் அணியில் இருந்தன. இந்த நிலையில் கூட்டணி அமைக்கப்பட்டிருப்பதால் கடும் போட்டி நிறைந்ததாக உத்தரப்பிரதேச தேர்தல் களம் மாறிவிட்டது.

இதுகுறித்து பாஜக கூட்டணி கட்சியான பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம்பிரகாஷ் ராஜ்பர் கூறுகையில், ''மாநிலம் முழுவதும் காவி அலை வீசுவதாக பாஜக எண்ணிக் கொண்டிருக்கிறது. 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்களுக்கு ஆதரவு அளிப்பதாக தவறான கணக்கை பாஜக போட்டுள்ளது.

Advertisement

இப்போது வெற்றி பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல. அதனைத்தான் கோரக்பூர், பூல்பூர், கைரானா மக்களவை தொகுதி தோல்விகளும், நூர்பூர் சட்டசபை தொகுதி தோல்வியும் நமக்கு காட்டியுள்ளன'' என்றார்.
 

Advertisement