This Article is From Jan 28, 2019

மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி

பிரதமர் மோடியை சிவசேனா கட்சி தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி வைக்க பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.

Mumbai:

மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜகவும் - சிவசேனாவும் கூட்டணி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருவதாக தகவல்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதற்கு பின்னர் சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''மகாராஷ்டிராவை பொறுத்தவரையில் பாஜகவும், சிவசேனாவும் சகோதரர்களாக செயல்படுகிறோம். இனியும் செயல்படுவோம்'' என்று கூறினார்.

மத்தியிலும் மகாராஷ்டிர மாநிலத்திலும் பாஜக ஆட்சி செய்து வருகிறது.  இதனை சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. இதனை பாஜக பொருட்படுத்தவில்லை என்றே தெரிகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது பாஜக - சிவசேனா கூட்டணி மொத்தம் உள்ள 48-ல் 41 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு பின்னர் நடந்த மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் தனித்து போட்டியிட்டன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தேர்தலுக்கு பின்னர் பாஜகவை சிவசேனா ஆதரித்தது.

உள்ளாட்சி தேர்தலில்  பாஜக உடனான கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டது. அப்போது பாஜகவுடன் எதிர்காலத்தில் கூட்டணியே கிடையாது உத்தவ் தாக்கரே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

.