This Article is From Jan 04, 2019

மேகதாது விவகாரத்தை மறைப்பதில் பாஜகவும் காங்கிரசும் இணக்கமாக உள்ளது: தம்பிதுரை

மேகதாது விவகாரத்தை மறைக்கும் விஷயத்தில் பாஜகவும் காங்கிரசும் இணக்கமாக உள்ளது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement
Tamil Nadu Posted by

கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக மக்களவையில் தொடர்ந்து குரல் எழுப்பிய அதிமுக எம்பிக்கள் 31 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை,
மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள் ஜனநாயக வழியில் போராடி வருகிறார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை.

தமிழகத்தின் உரிமை காக்கப்படவேண்டுமானால், மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்ற அவர், மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காது.

இதற்காக ஜனநாயக வழியில் போராட்டம் நடத்திய எம்பிக்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். இத்தகைய செயல் ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்த போராட்டம் இதோடு நின்றுவிடாது. அவைக்கு வராவிட்டால்கூட நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே தொடர்ந்து போராட்டம் நடைபெறும்.

Advertisement

காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் நாடாளுமன்றத்தில் இணக்கம் உள்ளதென. இதைத் தான் சொல்கிறோம்  மேகதாது விவகாரத்தை மறைக்கவே ரபேல் விவகாரத்தை காங்கிரஸ் எழுப்புகிறது. ரபேல் விவகாரத்திற்குப் பதிலளிப்பதுபோல் மேகதாது விவகாரத்தை பாஜக மறைக்கிறது என்றார்.

Advertisement