This Article is From Nov 12, 2018

ராஜஸ்தான் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!

ராஜஸ்தான் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை அம்மாநில பாஜக வெளியிட்டுள்ளது

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, ஜல்ரபதன் தொகுதியிலிருந்து போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ராஜஸ்தான் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை அம்மாநில பாஜக வெளியிட்டுள்ளது. முதற்கட்ட பட்டியிலான அதில் 131 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் புதியதாக 25 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, ஜல்ரபதன் தொகுதியிலிருந்து போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாநிலத்தின் முக்கிய பாஜக புள்ளியான கைலான் மேகாவாலுக்கு தொகுதி மாற்றப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் நட்டா, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். ‘பாஜக தேர்தல் குழுவுடன் அனைத்து வேட்பாளர்களைப் பற்றியும் நன்கு ஆலோசிக்கப்பட்டுதான் பட்டியல் தயாரிக்கப்பட்டது. மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் சீக்கிரமே வெளியிடப்படும்' என்று அவர் கூறியுள்ளார்.

பல கருத்துக் கணிப்புகள், இந்த முறை காங்கிரஸ் தான் ராஜஸ்தான் தேர்தலில் வெற்றி பெறும் என்று கூறி வருவதால், பாஜக சற்று ஆட்டம் கண்டுதான் உள்ளது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக மாநிலத்தில் நடந்த இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியுள்ளது.

2013 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தம் இருக்கும் 200 தொகுதிகளில் 163-ல் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

.