This Article is From May 29, 2019

மோடி - அமித் ஷாவிடம் இருந்து ஃபோன் வந்தால் மட்டுமே அமைச்சர் பதவி! எதிர்பார்ப்பில் எம்.பி.க்கள்!!

எந்தவித இடையூறும் இன்று பிரதமர் மோடியும், அமித் ஷாவும் புதிய மத்திய அரசின் அமைச்சர்கள் பட்டியலை தயார் செய்துள்ளனர்.

அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளவர்களுக்கு பிரதமர் மோடி நாளை காலை தேநீர் விருந்தை அளிக்கிறார்.

New Delhi:


மத்தியில் மோடி தலைமையிலான அரசு நாளை பொறுப்பேற்க உள்ளது. இதில் அமைச்சர்கள் இடம்பெறப் போகம் நபர்களை மோடியும் - அமித் ஷாவும் தேர்வு செய்துள்ளனர். அவர்களில் ஒருவரிடம் இருந்து ஃபோன் அழைப்பு வந்தால் மட்டுமே சம்பந்தப்பட்டவர் அமைச்சராகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் மோடி - அமித் ஷாவிடம் இருந்து போன் அழைப்பு வராதா என்ற எதிர்பார்ப்பில் பாஜக எம்.பி.க்கள் உள்ளனர். அமைச்சர்களாக யார் யாரெல்லாம் பொறுப்பேற்க உள்ளனர் என்ற தகவல் மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. 

பட்டியல் மோடி - அமித் ஷாவிடம் மட்டுமே இருப்பதால் புதிய அமைச்சர்கள் குறித்த தகவல் வெளிவர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. முன்னதாக டெல்லிக்கு வரும்படி ஏதேனும் அழைப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு வந்தால் அந்த போலியான அழைப்புகளை நம்ப வேண்டாம் என்று மோடி கடந்த சனிக்கிழமை எச்சரிக்கை செய்திருந்தார். 

இதற்கிடையே மோடியின் அமைச்சரவையில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி இடம்பெறுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 'என்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காவும், எனது உடல்நலனுக்காகவும் என்னை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும். புதிய அரசில் எனக்கு பொறுப்பு அளிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்'  என்று குறிப்பிட்டுள்ளார். 

சர்க்கரை நோயால் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த ஆண்டு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் நிலை மேலும் மோசமாகியுள்ளது. புதிய அரசில் அவர் இடம்பெற வேண்டும் என அமித் ஷாவும், மோடியும் விரும்புகின்றனர். இதற்காக அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.

.