This Article is From Feb 03, 2019

பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்தது பாஜக! - டிடிவி தினரகன் தாக்கு

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் அறிக்கையில் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடப்படும் என்று கூறி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது பாஜக

பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்தது பாஜக! - டிடிவி தினரகன் தாக்கு

திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பேசிய டிடிவி தினகரன்,

மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, ஒன்றுமே செய்யாதவர்கள், தற்போது இடைக்கால பட்ஜெட்டை அறிவித்துள்ளனர்கள். இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் அறிக்கையில் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடப்படும் என்று கூறி மக்களை ஏமாற்றி வாக்கு வாங்கினார்கள்.

ஆனால் அவர்களுடைய வாக்குறுதிகளை தமிழக மக்கள் நம்பாமல் பாராளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளிலும் ஜெயலலிதாவுக்கு வெற்றியை வழங்கினார்கள். ஆனால் தற்போது இவர்கள் மத்திய அரசின் கிளை அலுவலகம் போல் செயல்பட்டு வருகிறார்கள். வருகிற தேர்தலில் இவர்களை டெபாசிட் இழக்க செய்வதன் மூலம் மத்திய அரசுக்கும், அவர்களுடைய ஏஜெண்டாக செயல்படும் தமிழக அரசுக்கும் முடிவு கட்டவேண்டும்.

தமிழக மாணவ-மாணவிகளை பாதிக்கக்கூடிய நீட்தேர்வு வேண்டாம் என்று ஜெயலலிதா நிராகரித்தார். இந்த தேர்வு மூலம் கிராமப் புற மாணவ-மாணவிகள் மருத்துவக்கல்லூரியில் சேருவது குதிரை கொம்பாக இருக்கிறது. ஆனால் தற்போது மத்தியில் ஆளுகிறவர்கள் சொல்லும் கட்டளைகளை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு உள்ளது.

4¾ ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, ஒன்றுமே செய்யாதவர்கள், தற்போது இடைக்கால பட்ஜெட்டை அறிவித்துள்ளார்கள். வருகிற தேர்தலில் இவர்களை டெபாசிட் இழக்க செய்வதன் மூலம் மத்திய அரசுக்கும், அவர்களுடைய ஏஜெண்டாக செயல்படும் தமிழக அரசுக்கும் முடிவு கட்ட வேண்டும். துரோகம் செய்தவர்களுக்கு தமிழக மக்கள் உறுதுணையாக இருக்க மாட்டார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

.