This Article is From Oct 09, 2018

மக்களவை தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்காளத்தில் 3 ரத யாத்திரையை நடத்துகிறது பாஜக

மேற்கு வங்காளத்தில் வாக்குகளை திரட்டும் முயற்சியாக டிசம்பர் மாதத்தில் இருந்து ரத யாத்திரை நடத்தப்படும் என்று அம்மாநில பாஜக நிர்வாகம் அறிவித்திருக்கிறது

மக்களவை தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்காளத்தில் 3 ரத யாத்திரையை நடத்துகிறது பாஜக

ஒவ்வொரு ரத யாத்திரையும் 14 மக்களவை தொகுதிகள் வழியே செல்கிறது.

Kolkata:

மேற்கு வங்காளத்தில் பெரும்பான்மையான மக்களவை தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக மாநில பாஜக நிர்வாகம் சார்பாக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

அந்த வகையில் மாநிலம் முழுவதும் 3 ரத யாத்திரைகளை நடத்த பாஜக முயற்சித்து வருகிறது. இங்கு மொத்தம் 42 மக்களவை தொகுதிகள் உள்ளன. இவை முழுவதும் செல்லும் விதமாக 3 ரத யாத்திரைகள் நடத்தப்படும். ஒவ்வொரு ரத யாத்திரையும் 14 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் திலிப் கோஷ் அளித்துள்ள பேட்டியில், ரத யாத்திரைகள் டிசம்பர் மாதம் தொடங்கும். ஆனால் அதற்கான பிரசாரங்கள் துர்கா பூஜைக்கு பின்னர் தொடங்கப்பட்டு விடும். முதல் ரத யாத்திரை பிர்பூம் மாவட்டத்தில் உள்ள தாராபித் நகரில் அமைந்திருக்கும் கோயிலில் தொடங்குகிறது. டிசம்பர் 3-ம் தேதி நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

மேற்கு வங்காளத்தில் நடக்கும் 3 ரத யாத்திரைகள் அனைத்திலும் பங்கேற்க அமித் ஷா ஆர்வமாக உள்ளார். ஆனால், மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களை ஆளும் முதல்வர்கள் பங்கேற்பது ஆகியவை குறித்து முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

2-வது ரத யாத்திரை நம்கானா - கங்கா சாகரில் தொடங்குகிறது. இறுதியாக கொல்கத்தாவில் வரும் ஜனவரி மாதத்தின்போது பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றார்.
 

.