This Article is From Oct 30, 2018

பொதுத்தேர்தலில் அதிக முஸ்லிம்களை மேற்குவங்கத்தில் வேட்பாளர்களாக நிறுத்தும் பாஜக

உள்ளாட்சி தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியதால் பாஜக அதிக வாக்குகளை பெற்றது. அந்த யுக்தியை சட்டசபை தேர்தலிலும் கையில் எடுக்கிறது பாஜக

பொதுத்தேர்தலில் அதிக முஸ்லிம்களை மேற்குவங்கத்தில் வேட்பாளர்களாக நிறுத்தும் பாஜக

2019 பொதுத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் அதிக முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

Kolkata:

மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி சிறுபான்மையினர் மத்தியில் செல்வாக்கு உள்ளது. இதனை உடைக்க பாஜக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாஜக முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் இறக்கியது. இதனால் வாக்கு வங்கி சற்று அதிகரித்ததால் பாஜக நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

குறிப்பாக உள்ளாட்சி தேர்தலில் 850-க்கும் அதிகமான முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இவர்களில் பாதிக்கும் அதிகமானோர் வெற்றி பெற்றார்கள்.

இதே யுக்தியை 2019 பொதுத்தேர்தலிலும் கடைபிடிக்க பாஜக முடிவு செய்திருக்கிறது. மொத்தம் 42 மக்களவை தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்காளத்தில் கடந்த முறை 2 முஸ்லிம் வேட்பாளர்களை மட்டுமே பாஜக நிறுத்தியது.

மாநிலத்தில் முஸ்லிம் வாக்குகள் மட்டும் 30 சதவீதம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்த முறை வரும் மக்களவை தேர்தலில் அதிக முஸ்லிம் வேட்பாளர்களை பாஜக வேட்பாளர்களாக நிறுத்தவுள்ளது.

பாஜகவின் மாற்றம் குறித்து ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பார்த்தா சாட்டர்ஜி அளித்துள்ள பேட்டியில், சிறுபான்மையினர் எங்கள் மீது முழு நம்பிக்கையில் உள்ளன. பாஜகவின் யுக்திகள் ஒன்றும் எங்களுக்கு பாதிப்பை அளிக்காது என்றார்.

.