This Article is From Jan 23, 2019

‘ராகுல் காந்தி ஃபெயில்; அதனால்தான் பிரியங்கா என்ட்ரி..!’- சீறும் பாஜக

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா இன்று அதிகாரபூர்வமாக அரசியலில் குதித்துள்ளார்.

‘ராகுல் காந்தி ஃபெயில்; அதனால்தான் பிரியங்கா என்ட்ரி..!’- சீறும் பாஜக

உத்தர பிரதேசத்தில் பாஜக-வுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் எடுத்த மூவ் ஆக இது பார்க்கப்படுகிறது.

New Delhi:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா இன்று அதிகாரபூர்வமாக அரசியலில் குதித்துள்ளார். அவருக்கு இன்று முதல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு உத்தர பிரதேச மாவட்டப் பொறுப்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் பாஜக-வுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் எடுத்த மூவ் ஆக இது பார்க்கப்படுகிறது. ஆனால் பிரியங்காவின் அரசியல் நுழைவு குறித்து வேறு மாதிரி கருத்து தெரிவித்துள்ளது பாஜக.

அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, “காங்கிரஸ், வெளிப்படையாகவே அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஃபெயில் ஆகிவிட்டதாக அறிவித்துள்ளது. அந்த தோல்வியை சரிகட்ட காந்தி குடும்பத்தை ஆராய்ந்துள்ளனர். அதன் விளைவே பிரியங்காவின் அரசியல் நுழைவு.

mujpvm5

 

பாஜக-வுக்கு எதிராக எதிர்கட்சிகளை காங்கிரஸ் ஒன்றிணைக்கப் பார்க்கிறது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை பல கட்சிகள் ஏற்கவில்லை. இதை சரி செய்யும் நோக்கில்தான் பிரியங்களா இறக்கிவிடப்பட்டுள்ளார். 

பாஜக-வைப் பொறுத்தவரை கட்சிதான் குடும்பம். ஆனால் காங்கிரஸிலோ ஒரே குடும்பம்தான் மொத்த கட்சியும். அந்தக் கட்சியில் அனைத்துப் பதவிகளும் ஒரே குடும்பத்தினருக்குத்தான் செல்லும். நேரு, இந்திரா, ராஜீவுக்குப் பிறகு யார்… எப்போதும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் காங்கிரஸில் உயர் பதவிக்கு வர முடியும்” என்று அடுக்கடுக்காக காங்கிரஸை விமர்சித்துள்ளார். 

முன்னதாக பிரியங்காவின் அரசியல் நுழைவு குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “பிரியங்காவுக்குப் பொறுப்பு கொடுத்த பின்னர், பாஜக அச்சத்தில் உறைந்திருக்கும். என் சகோதரிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பில் மிகச் சிறப்பாக செயலாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கடுமையான உழைப்பாளி பிரியங்கா” என்று கருத்து தெரிவித்திருந்தார். 

.