This Article is From Nov 02, 2018

ம.பி. தேர்தலில் போட்டியிட 3 அமைச்சர்களுக்கு அனுமதி மறுத்த பாஜக

மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து 3 முறையாக பாஜக ஆட்சியில் உள்ளது

ம.பி. தேர்தலில் போட்டியிட 3 அமைச்சர்களுக்கு அனுமதி மறுத்த பாஜக

மத்திய பிரதேசத்தில் நவம்பர் 28-ம் தேதில் தேர்தல் நடைபெறவுள்ளது.

New Delhi:

மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 177 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது. இதில் தற்போது அமைச்சர்களாக இருக்கும் 3 பேரின் பெயர் இடம் பெறவில்லை.

இதேபோன்று தெலங்கானாவில் போட்டியிடும் 28 வேட்பாளர்கள், மிசோரமில் 24 வேட்பாளர்கள் ஆகியோரின் பட்டியலையும் பாஜக வெளியிட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வழக்கமாக போட்டியிடும் புத்னி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் அங்கு கடந்த 2005-ல் இருந்தே எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

அவரை தவிர்த்து வனத்துறை அமைச்சராக இருக்கும் கவுரி சங்கர் சேஜ்வார், நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஹர்ஷ் சிங், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் மாயா சிங் ஆகியோருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் நவம்பர் 28-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தெலங்கானாவில் டிசம்பர் 7-ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 11-ம்தேதி எண்ணப்பட்டு அன்றைக்கே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
 

.