This Article is From Jan 03, 2020

''இந்துத்துவா வாக்கு வங்கிக்காக அருவருப்பான அரசியலை பாஜக செய்கிறது'' : சீதாராம் யெச்சூரி

குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரில் பேட்டி அளித்துள்ளார். வாக்கு வங்கிக்காக வேண்டுமென்றே சமூக ஓரங்கட்டும் அரசியலை செய்வதாக பாஜக மீது அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

''இந்துத்துவா வாக்கு வங்கிக்காக அருவருப்பான அரசியலை பாஜக செய்கிறது'' : சீதாராம் யெச்சூரி

அருவருப்பான அரசியலில் பாஜக ஈடுபடுவதாக சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

Guwahati:

குடியுரிமை சட்ட விவகாரம், என்.ஆர்.சி. போராட்டம் உள்ளிட்டவை குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்துத்வா வாக்கு வங்கிக்காக பாஜக அருவருப்பான அரசியலை செய்து வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக அசாம் மாநிலம் கவுகாத்தியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது-

என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடான என்.ஆர்.சி., குடியுரிமை சட்ட திருத்தம் ஆகியவை, இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்காக பாஜக கொண்டுவந்ததாகும். இந்த சட்டங்களும் பதிவேடுகளும், பதற்றத்தையும், அச்சத்தையும், வன்முறையை ஏற்படுத்தும். இதனால் சமூக ரீதியில் பிரிவினை உண்டாகும்.

பாஜக இவற்றை வேண்டுமென்றே செய்கிறது. இந்துத்வா வாக்கு வங்கிக்காக பாஜக அருவருப்பான அரசியலில் ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறு சீதாராம் யெச்சூரி பேசினார். முன்னதாக கவுகாத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து பேரணி, பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய சீதாராம் யெச்சூரி, குடியுரிமை சட்ட திருத்தம் என்பது நிகழ்கால இந்தியாவுக்கும், எதிர்கால இந்தியாவுக்கும் மிகவும் ஆபத்தானது என்று குறிப்பிட்டார். 

.