Read in English
This Article is From Oct 19, 2019

“இப்படி செஞ்சுட்டாங்களே..!” - Manmohan Singh-ஐ வீடியோ வெளியிட்டு கலாய்த்த BJP!

BJPவின் ஊடகப் பிரிவின் தலைவரான அமித் மால்வியா, இரண்டு வீடியோக்களை ஷேர் செய்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை கேலி செய்துள்ளார்

Advertisement
இந்தியா Edited by

ஒரு வீடியோவில் மன்மோகன், காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசுவதும், இன்னொரு வீடியோவில் காங்கிரஸின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான மணிஷ் திவாரி அது குறித்துப் பேசுவதும் தெரிகிறது. 

New Delhi:

கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மூ காஷ்மீர் (Kashmir) மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவான 370-ஐ (Article 370)) மத்திய அரசு ரத்து செய்தது. அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் (Congress) கட்சியில் ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வருகின்றன. இந்நிலையில் இது குறித்து ஒரு வீடியோவையும் பாஜக (BJP) வெளியிட்டிருக்கிறது. 

பாஜக-வின் ஊடகப் பிரிவின் தலைவரான அமித் மால்வியா, இரண்டு வீடியோக்களை ஷேர் செய்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும், காங்கிரஸையும் கேலி செய்துள்ளார். ஒரு வீடியோவில் மன்மோகன், காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசுவதும், இன்னொரு வீடியோவில் காங்கிரஸின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான மணிஷ் திவாரி அது குறித்துப் பேசுவதும் தெரிகிறது. 

முதல் வீடியோவில் மன்மோகன் சிங், “சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்வது குறித்தான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் வந்தபோது, அதை ஆதரித்தே வாக்களித்தது காங்கிரஸ்” என்கிறார்.
 


இன்னொரு வீடியோவில் மணிஷ் திவாரி, “ஜம்மூ காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதா லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் வந்தபோது, அதற்கு எதிராகத்தான் காங்கிரஸ் கட்சி வாக்களித்தது. அதைப் போலவே, காஷ்மீரை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கும் காங்கிரஸ் ஆதரவு தரவில்லை. அதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு” என்கிறார். 

Advertisement

இந்த இரு வீடியோக்களையும் மேற்கோள் காட்டி மால்வியா, “காங்கிரஸ் கட்சி, சட்டப் பிரிவு 370 குறித்தான முடிவில் எந்தப் பக்கம் நிற்கிறது. காங்கிரஸ், மன்மோகன் சிங் மூலம் தனது பொய்களை பரப்ப ஆரம்பித்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார். 

Jammu and Kashmir விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸும் பாஜக-வும் தேர்தல் களத்தில் தீர்க்கமாக வாதப் போர் நடத்தி வருகின்றன. பாஜக, தன் பிரசாரங்களில் காஷ்மீர் விவகாரத்தைக் கையிலெடுத்துப் பேசி வருகிறது. 

ஜம்மூ காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு சுமார் 50 நாட்களுக்கு மேலாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டுள்ளன. 
 

Advertisement
Advertisement