This Article is From Dec 18, 2019

'குடியுரிமை சட்ட விவகாரத்தில் பாஜக வன்முறையைத் தூண்டி விடுகிறது' - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

டெல்லி மக்கள் அமைதியை விரும்புவதாகவும், தேர்தல் தோல்வி காரணமாக பாஜக வன்முறையைத் தூண்டி விடுவதாகவும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

Advertisement
இந்தியா Edited by

டெல்லி மக்கள் அமைதியை விரும்புவதாக மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.

New Delhi:

குடியுரிமை சட்ட விவகாரத்தில் பாஜக வன்முறையைத் தூண்டி விடுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பதிவில், 'டெல்லி மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். தேர்தலில் தோற்று விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக பாஜக வன்முறையை தூண்டி விடுகிறது. 2015 தேர்தலுக்கு முன்பாக திரிலோகபுரி, பவானா பகுதியில் பாஜக வன்முறையைத் தூண்டி விட்டது. ஆனால் மக்கள் பாஜகவுக்கு தேர்தலில் பாடம் புகட்டினர். அதே நிலைமை மீண்டும் ஏற்படும்' என்று தெரிவித்துள்ளார். 

சீலாம்பூரை ஜாப்ராபாத்தடன் இணைக்கும் சாலையை குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் காரணமாக போலீசர் முடக்கினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் நடந்த போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது, நடத்தப்பட்ட தடியடியில் மாணவர்கள் காயம் அடைந்தனர். ஞாயிறன்று நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து சீலாம்பூரில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. 

Advertisement

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசத்திலிருந்து 2014 டிசம்பர் 31-ம்தேதிக்கு முன்பு வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை சட்டம் இந்திய குடியுரிமையை வழங்குகிறது. 

இந்த சட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள் அமைதி காக்கும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடி உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். 

Advertisement
Advertisement