This Article is From Nov 03, 2018

ராஜஸ்தான் தேர்தல்: புதிய யுக்தியைக் கையாளும் பாஜக!

ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே, ஜலவாரில் மக்களை சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தார்

ராஜஸ்தான் தேர்தல்: புதிய யுக்தியைக் கையாளும் பாஜக!

மக்களுடன் கலந்துரையாடும் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே

Jaipur:

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அங்கு ஆட்சியில் இருக்கும் பாஜக, ‘பூத் மகாசம்பர்க்' என்று புதிய பிரசார யுக்தியை செயல்படுத்தி வருகிறது.

இந்த புதிய யுக்தியைக் குறித்து பாஜக வெளியிட்ட அறிக்கையில், ‘பூத் மகாசம்பர்க் பிரசாரத் திட்டத்தின் மூலம், எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் எங்கள் கட்சியினரும் வீடு வீடாக சென்று மக்களின் கோரிக்கைகளை கேட்டறிவார்கள்' என்று தெரிவித்துள்ளது.

இந்த புதிய பிரசாரத்தையொட்டி, ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே, ஜலவாரில் மக்களை சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தார்.

இது ஒருபுறமிருக்க ராஜஸ்தான் மாநில பாஜக தேர்தல் கமிட்டி தலைவரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர், ஜெய்ப்பூரில் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அவர் மக்களை சந்தித்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

.