அவரை கட்சியிலிருந்து 6 ஆண்டுகள் நீக்கம் செய்யப்படுவதாக கூறி பாஜக தலைவர் அனில் பலுனி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். (File)
New Delhi:
கையில் துப்பாக்கியுடன் நடனமாடிய பாஜக எம்எல்ஏ குன்வர் பிரணவ் சிங்கை கட்சியிலிருந்து 6 வருடங்களுக்கு இடைநீக்கம் செய்து அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. உத்தரகாண்ட் பாஜக எம்.எல்.ஏ குன்வர் பிரணவ் சிங் வாயில் துப்பாக்கியை கவ்விக் கொண்டு நடனமாடிய வீடியோ ஒன்று வைரலானது. உத்தரகாண்ட் மாநிலத்தின் கான்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக பதவி வகித்து வருகிறார் பிரணவ் சாம்பியன்.
இந்த வீடியோவில் எம்.எல்.ஏ மற்றும் அவரின் நண்பர்கள் மது அருந்திவிட்டு நடனம் ஆடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், தனது இரு கைகளில் துப்பாக்கியை வைத்து நடனமாடும் பிரனவ், ஒரு கட்டத்திற்கு மேல் வாயில் துப்பாக்கியை கவ்விக்கொண்டு ஆட்டம் போட்டார்.
இந்த வீடியோ விவகாரத்திற்க்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜக தலைமை இந்த வீடியோ குறித்து பிரணவ் சிங்கிடம் விளக்கம் கேட்டிருந்தது, ஆனால், கொடுக்கப்பட்ட விளக்கம் போதுமானதாக இல்லையென்பதால் அவரை கட்சியிலிருந்து 6 ஆண்டுகள் நீக்கம் செய்யப்படுவதாக கூறி பாஜக தலைவர் அனில் பலுனி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு பிரனவ் பத்திரிகையாளர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடும் வீடியோ ஒன்றும் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் கொடுத்த புகாரின் பேரில், இவரை பாஜக, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து மூன்று மாதங்களுக்கு நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.