மக்களவை தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் செயல்படுவார்.
New Delhi:
மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பாஜக எம்பி வீரேந்திர குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலம் திகாம்கார் தொகுதியை சேர்ந்த பாஜக எம்.பி வீரேந்திர குமார் ஆவர். 2019 மக்களவைத் தேர்தலை தொடர்ந்து, நடைபெற உள்ள முதல் கூட்டத்தொடரில் சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார். அதுவரை தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
17வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் ஜூன் 17ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் இரண்டு நாட்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்பார்கள். இதைத்தொடர்ந்து, ஜூன் 19ஆம் தேதி புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார்.
இதைத்தொடர்ந்து, ஜூன் 20ஆம் தேதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு அவை உறுப்பினர்கள் மத்தியிலும் உரையாற்றுவார்.