ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக செயலாளர் (J&K State BJP Secretary) அனில் பாரிஹர்
Jammu: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் (Kishtwar) பகுதியில் மாநில பாஜக செயலாளர் அனில் பாரிஹர் (Anil Parihar, BJP) மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் இன்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்ற அடையாளம் காணப்படவில்லை. தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் ரவிந்தர் ரெய்னா அளித்த பேட்டியில், “ இன்று மாலை 8 மணியளவில் பாஜக மாநில செயலாளர் அனில் பாரிஹர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் தீவிரவாதிகளால் சுடப்பட்டனர். இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு அவர்களது உயிர் பிரிந்தது” என்றார்
இந்த சம்பவத்தை தொடர்ந்து கிஷ்த்வாரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.