மாவோயிஸ்ட் தலைவர் அஜய் ஆலமிக்கு ஒரு டிராக்டர் வாங்கியதற்காக மூவரும் கைது செய்யப்பட்டனர்,
ஹைலைட்ஸ்
- ஜகத் 10 ஆண்டுகளாக மாவோயிஸ்ட்டுகளுக்கு பொருட்களை வழங்கியதை ஒப்புக்கொண்டார்
- பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பிரிவு துணைத் தலைவர் ஜகத்
- மாவோயிஸ்ட்டுகளுக்கு காலணிகள், காகிதம், தோட்டாக்களை வழங்கியுள்ளார்
Dantewada: சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளுக்கு டிராக்டர் வழங்கியதாக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பிரிவு துணைத் தலைவர் ஜகத் பூஜாரி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள இருவரில் ஜகத் பூஜாரி கடந்த பத்தாண்டுகளாக மாவோயிஸ்ட்டுகளுக்கு வேண்டிய உதவிகளையும் பொருட்களையும் வழங்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மாவோயிஸ்ட் தலைவர் அஜய் ஆலமிக்கு டிராக்டர் வாங்கியதற்காக அஜய்யுடன் சேர்த்து மேற்குறிப்பிட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 5 லட்சம் ரூபாய் ரொக்கமும், 9,10,000 ரூபாய் மதிப்புள்ள புதிய டிராக்டரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
"கடந்த சில மாதங்களாக, அலமி உட்பட பல மாவோயிஸ்ட் தலைவர்களின் அழைப்புகளை நாங்கள் இடைமறித்து வருகிறோம், பூஜாரியின் செல் எண் பல முறை பொருட்கள் வழங்குவது தொடர்பான உரையாடல்களில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் மவோயிஸ்ட்டு தலைவர் ஆலமிக்கு ஒரு டிராக்டர் அவசியமாக இருந்தது. அவரிடம் நிறைய பணமும் இருந்துள்ளது. எனவே டிராக்டர் வாங்கி தருமாறும், வாங்குவதற்கு யாருடைய ஆவணங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் ஆலமி ஜகத்திடம் விரிவாக கூறியிருந்தார். அலமியின் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் யூசெண்டியின் மனைவியினுடைய ஆவணங்களை பயன்படுத்த வேண்டு்ம் என்பதையும் ஆலமி தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.“ என்று டான்டேவாடா போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் பல்லவ் கூறியுள்ளார்.
காவல்துறையினர் தங்களுக்கு கிடைத்த இந்த தகவலின் அடிப்படையில் டன்டேவாடா மாவட்டம், கீதம் அருகே இரு இடங்களில் தடுப்புகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். புதிய டிராக்டர்களை அனைத்தையும் தடுத்து நிறுத்தி சோதனையை மேற்கொண்டனர். இந்நிலையில் டிராக்டரிலிருந்த ரமேஷ் யூசெண்டியிடம் பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் அதற்கான ஆவணங்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டபோது அவர் சரிவர தெளிவாக பதிலளிக்கவில்லை.
விசாரணையில் பாஜக தலைவர் ஜகத் 10 ஆண்டுகளாக மாவோயிஸ்ட்டுகளுக்கு பொருட்களை வழங்கியதை ஒப்புக்கொண்டார் என போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் பல்லவ் கூறியுள்ளார்.
மாவோயிஸ்ட்டுகளுக்கு சீருடைகள், காலணிகள், காகிதம், அச்சுப்பொறிகள், தோட்டாக்கள், பேட்டரிகள் மற்றும் ரேடியோ செட் போன்ற பெரிய பொருட்களை வழங்குவதிலும் புஜாரி ஈடுபட்டதாக போலீசாருக்கு முன்னர் தகவல் கிடைத்தது, ஆனால் எந்த ஆதாரமும் இல்லை. இந்நிலையில் உளவுத்துறை உதவியுடன் தற்போது ஆதாரங்களோடு பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். "ஜகத் புஜாரி மாவோயிஸ்ட்டுகளைச் சந்தித்து கிராமவாசிகள் மூலமாக ஹண்டவாடாவின் உட்புறங்களுக்கு பொருட்களை அனுப்புகிறார் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். விசாரணையின் போது, மேலும் பல பொருட்களை அனுப்பி வைப்பதற்கான திட்டம் குறித்த தகவல்கள் கிடைத்தன. தற்போது மீண்டும் விசாரணை நடைபெறும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள். என பல்லவ் கூறியுள்ளார்.