This Article is From Jul 24, 2019

''ஆர்.எஸ்.எஸ். ஆசிர்வாதத்திற்கு காத்திருக்கிறேன்'' - எடியூரப்பா பேட்டி!

கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்துள்ள நிலையில், 4-வது முறையாக எடியூரப்பா முதல்வர் ஆகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

''ஆர்.எஸ்.எஸ். ஆசிர்வாதத்திற்கு காத்திருக்கிறேன்'' - எடியூரப்பா பேட்டி!

நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடகத்தில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.

Bengaluru:

ஆர்.எஸ்.எஸ். ஆசிர்வாதத்திற்கு காத்திருப்பதாக கர்நாடக முதல்வராக ஆகப்போகும் எடியூரப்பா கூறியுள்ளார். விரைவில் அவர் டெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எடியூரப்பா 3 முறை முதல்வராக இருந்திருக்கிறார். தற்போது அவர் 4-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பெங்களூருவுக்கு வந்த எடியூரப்பா அங்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார். கர்நாடக முதல்வரை தேர்வு செய்யும் விவகாரத்தில் தலைமையின் டெல்லியின் முடிவுக்காக காத்திருப்பதாக எடியூரப்பா கூறியுள்ளார். 

டெல்லிக்கு சென்று எடியூரப்பா உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷாவையும், கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டாவையும் சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் ராஜினாமா செய்த எம்எல்ஏக்களை தவிர்த்து மீதம் இருந்த உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். 

இதில் குமாரசாமி ஆட்சி நீடிக்க வேண்டும் என்று 99 உறுப்பினர்களும், பாஜகவுக்கு ஆதரவாக 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதையடுத்து ஆட்சி கவிழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

.