हिंदी में पढ़ें বাংলায় পড়ুন Read in English
This Article is From Dec 24, 2019

நேதாஜியின் உறவினரும் BJP நிர்வாகியுமான சந்திர போஸ் CAA-விற்கு எதிராக போர்க் குரல்!

மதத்தின் அடிப்படையில் இந்தியாவில் குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

இந்திய சட்ட சாசனத்தின் மதச்சார்பின்மை இந்தச் சட்டத்தின் மூலமாக பாதிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் சட்டத்தை விமர்சிப்பவர்கள். 

Highlights

  • இந்தியா அனைத்து மதத்துக்கும் சொந்தமானது: Chandra Bose
  • பாஜக, குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது
  • கொல்கத்தாவிலும் சமீபத்தில் பாஜக பெரும் பேரணியை நடத்தியது
Kolkata:

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் பாஜக சார்பில், கொல்கத்தாவில் குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. இந்நிலையில் கொல்கத்தாவில் பாஜக முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான சந்திர குமார் போஸ், குடியுரிமைச் சட்டம் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

“சிஏஏ 2019 சட்டம், எந்த மதத்திற்கும் பாகுபாடு காட்டாது என்றால், இந்து, சீக்கியர், பௌத்தர்கள், பார்சீக்கள் மற்றும் ஜெயினர்களை மட்டும் இணைத்துள்ளது ஏன்? ஏன் முஸ்லிம்களையும் இணைக்கவில்லை. நாம் வெளிப்படையாக இருப்போம்.

இந்தியாவை எந்த தேசத்தோடும் ஒப்பிடுவோ மதிப்பிடுவோ வேண்டாம். இந்த தேசம் அனைத்து சமூகத்தினருக்கும் மதத்தினருக்கும் சொந்தமானது,” என்று ட்விட்டர் மூலம் பகீர் கிளப்பும் கருத்தைக் கூறியுள்ளார் போஸ்.
 

பாஜக, குடியுரிமைச் சட்டம் பற்றி விளக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு பரப்புரைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. 

Advertisement

சமீபத்தில்தான் பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா, கொல்கத்தாவில் ‘நன்றி தெரவிக்கும் பேரணியில்' கலந்து கொண்டார். தற்போது நடைமுறைபடுத்தியுள்ள சட்டம் மூலம், வங்கதேசத்திலிருந்து வங்கத்தில் குடியேறிய இந்துக்களுக்கு குடியுரிமை கிடைக்கும் எனத் தெரிகிறது. இதனால் தங்களுக்கு சாதகமாக அரசியல் சூழல் மாறும் என பாஜக நினைக்கிறது. 

மதத்தின் அடிப்படையில் இந்தியாவில் குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திருத்திற்கு, ‘இந்திய அளவில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில்' மிகப் பெரும் எதிர்ப்பு இருப்பதாக சொல்கிறது காங்கிரஸ். 

Advertisement

அதே நேரத்தில் இந்தக் குற்றச்சாடுகளை மறுக்கும் மத்திய அரசு தரப்பு, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து மத ஒடுக்குமுறையால் வெளியேறும் அந்நாட்டுச் சிறுபான்மையினருக்கு இந்தச் சட்டம் பாதுகாப்பை வழங்கும் என்கிறது. இந்திய சட்ட சாசனத்தின் மதச்சார்பின்மை இந்தச் சட்டத்தின் மூலமாக பாதிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் சட்டத்தை விமர்சிப்பவர்கள். 

பாஜக அரசு கொண்டு வந்துள்ள இச்சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அகாலி தளம் கட்சிகளும் தற்போது எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளன. அகாலி தளம், சட்டத்தில் முஸ்லிம்களும் இணைக்கப்பட வேண்டும் என்று கோரி வருகிறது. 

Advertisement