বাংলায় পড়ুন Read in English
This Article is From Jul 09, 2020

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாஜக தலைவர் உயிரிழப்பு!

தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். இந்த தாக்குதல் காவல் நிலையத்திற்கு 10 மீட்டர் தொலைவில் நடந்துள்ளது. அவர்கள் சைலன்சர் பொருத்திய ரிவால்வரை பயன்படுத்தியுள்ளனர் என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement
இந்தியா Edited by (with inputs from Agencies)

Highlights

  • BJP leader Sheikh Wasim's father and brother were also killed
  • The attack took place while they were sitting outside a shop
  • PM Modi extended his condolences to the BJP leader's family
New Delhi:

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பந்திபூரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பகுதி பாஜக தலைவரான ஷேக் வாசிம் அவருடைய சகோதரர் உமர் பஷீர், மற்றும் அவருடைய தந்தை ஆஷிர் அஹ்மத் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு ஒன்பது மணி அளவில் உள்ளூர் காவல் நிலையம் அருகில் உள்ள ஒரு கடையின் வாசலில் அமர்ந்திருந்த இவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காயமுற்ற மூவரையும் மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர் என ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

தகவலறிந்த பிரதமர் நள்ளிரவில் நிலைமை குறித்து விசாரித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் பாதுகாப்புப்படையின் தோல்வியினை காட்டுகின்றது. ஷேக் வாசிமுக்கு 8 வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தாக்குதல் நடைபெற்றபோது ஒருவரும் அவருடன் இல்லை. இந்நிலையில் கடமையை தவறியதற்காக பாதுகாப்பு வீரர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் ஐஜிபி விஜய்குமார் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது என மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisement

தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். இந்த தாக்குதல் காவல் நிலையத்திற்கு 10 மீட்டர் தொலைவில் நடந்துள்ளது. அவர்கள் சைலன்சர் பொருத்திய ரிவால்வரை பயன்படுத்தியுள்ளனர் என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் இந்த கொலையால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், "பாண்டிபோராவில் இளம் பாஜக தலைவர் வாசிம் பாரி மற்றும் அவரது சகோதரர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன். அவர்களுக்கு 8 கமாண்டோக்கள் பாதுகாப்பு இருந்தும் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். என ராம் மாதவ் டிவிட் செய்துள்ளார்.

Advertisement

திரு வசீமின் மரணம் கட்சிக்கு பெரும் இழப்பு என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

“தீவிரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலில் தந்தை மற்றும் சகோதரரையும் நாம் இழந்துள்ளோம். இது கட்சிக்கு மிகப்பெரிய இழப்பு. எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். முழு கட்சியும் துயரமடைந்த குடும்பத்துடன் நிற்கிறது. அவர்களின் தியாகம் வீணாகாது.“ என நட்டா டிவிட் செய்துள்ளார்.

முன்னாள் ஜே & கே முதலமைச்சர் உமர் அப்துல்லாவும் இந்த தாக்குதலை கண்டித்து ட்வீட் செய்துள்ளார். குடும்ப உறுப்பினர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஜனநாயகக் கட்சியும் வாசிம் கொல்லப்பட்டது குறித்து வருத்தத்தை தெரிவித்ததோடு, பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்த ஜே & கே நிர்வாகம் தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டி ட்வீட் செய்திருந்தது.

Advertisement

With input from ANI, PTI

Advertisement