சாம்ராத் குமாவத்துக்கு யாருடனும் முன்விரோதம் இல்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Pratapgarh: ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் பைக்கில் வந்த மர்ம நபர்களால் சனிக்கிழமையன்று கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட சாம்ராத் குமாவத் ரோட்டில் நின்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த 4 நபர்கள் முதலில் சாம்ராத்தை துப்பாக்கில் சுட்டுவிட்டு பின் கத்தியால் கழுத்தை அறுத்துள்ளனர். இச்சம்பவம் தெற்கு ராஜஸ்தான் பகுதியிலிருந்து நான்கு கி.மீ தொலைவில் உள்ள பிரதாப்ஹரா பகுதியில் நிகழ்ந்துள்ளது.
குமாவத் தாக்கிய மர்ம நபர்கள் உடனே சம்பவ இடத்தைவிட்டு தப்பிச் சென்றனர். அவரை காப்பாற்ற பொதுமக்கள் முயற்சி செய்தும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அப்பகுதி மக்கள் குமாவத்தின் இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி அவரின் சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதியிலும் பாஜக மீது மக்களுக்கு வெறுப்பு உள்ளது. அதே சமயம் தேர்தலுக்கு முன் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென்று போலீசார் உறுதியளித்துள்ளனர்.
குமாவத்துக்கு யாருடனும் முன்விரோதம் இல்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தால் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உள்ளூர் பாஜக கட்சித்தலைவர் மன்கு சிங், இதுகுறித்து கூறுகையில், சாம்ராத் குமாவத் கிராமத்தின் மூத்த பாஜக உறுப்பினர் என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஷோக் கிலோட் குமாவத்தின் இறப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.