This Article is From Sep 28, 2018

காங். முன்னாள் எம்.பி. திவ்யாவுக்கு எதிராக பாஜக தலைவர்கள் புகார்

தமிழக பாஜக தலைவர் காங்கிரஸ் சமூக வலை தளத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளனர்

காங். முன்னாள் எம்.பி. திவ்யாவுக்கு எதிராக பாஜக தலைவர்கள் புகார்

ரஃபேல் விவகாரம் தொடர்பாக நடிகையும், காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள நிர்வாகியான திவ்யா ஸ்பந்தனா சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்திருந்தார். இதற்கு எதிராக பாஜக தலைவர்கள் புகார் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் தலைமையில் கட்சி உறுப்பினர்கள் சிலர் கோவை சைபர் கிரைம் பிராஞ்ச்சில் புகார் அளித்துள்ளனர். அதில், கர்நாடகாவின் முன்னாள் எம்.பி.யான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திவ்யா ஸ்பந்தனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேகர், ரஃபேல் விமான விவாகரம் தொடர்பாக தரக்குறைவான வார்த்தைகளை ட்விட்டரில் திவ்யா கூறியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கிடையே லக்னோவை சேர்ந்த வழக்கறிஞர் சையது ரிஸ்வான் என்பவர் அளித்த புகாரின்பேரில் திவ்யா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.