சிங் சமூக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் ‘சீரோ’ படத்தில் காட்சி உள்ளது, சிர்சா
New Delhi: பாஜக எம்.எல்.ஏ மஜிந்தர் சிங் சிர்சா, சமீபத்தில் வெளியான ஷாருக் கானின் ‘சீரோ' பட ட்ரைலருக்கு எதிராக கொதித்துள்ளார்.
இது குறித்து சிங் சமூகத்தைச் சேர்ந்த சிர்சா, ‘சீரோ திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் ப்ரமோவில், ஷாருக் கான் உள்ளாடைகள் மட்டும் அணிந்திருக்கும் வகையில் ஒரு இடம் வருகிறது. அப்போது அவர் சிங் சமூக மக்கள் பயன்படுத்தும் கத்தி ஒன்றை அணிந்திருக்கிறார். இது சிங் சமூக மக்களின் நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கில் இருக்கிறது. இது குறித்து போலீஸ், ஷாருக் கான் மீதும், படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் மீதும் வழக்கு தொடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
டெல்லியின் ராஜவுரி பூங்கா தொகுதியிலிருந்து சிர்சா, பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். சிர்சா, ஷாருக் கான் மற்றும் ராய்க்கு சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிடுமாறு கடிதம் எழுதியுள்ளார். காட்சிகள் நீக்கப்படவில்லை என்றால், சிங் சமூக மக்கள் படத்துக்கு எதிராக போராட்டத்தில் குதிப்பார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் ஷாருக் கான் நடிப்பில் வெளியான சீரோ பட ட்ரைலர், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.