Read in English
This Article is From Aug 20, 2020

நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பொறுப்பிலிருந்து சசி தரூர் விலக பாஜக எம்.பிக்கள் வலியுறுத்தல்!

பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே,“ தரூரை நிலைக்குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.”

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வருவதாக பல கருத்துக்கள் மேலெழுந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக வெளிநாட்டு ஊடகங்களில் பேஸ்புக் தளத்தினை பாஜக கைப்பற்றியுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப துறைக்கான நிலைக் குழு தலைவர் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், பேஸ்புக் தொடர்பாக விசாரிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதனால் பாஜக எம்.பிக்கள் இருவர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சசி தரூர் "விதிகளை மீறுகிறார்" என்று குற்றம் சாட்டியுள்ளனர். நிலைக்குழுவின் உறுப்பினரான ராஜ்யவர்தன் ரத்தோர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். மேலும்,

இது குறித்து நிலைக்குழுவில் முதலில் கலந்தாலோசிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Advertisement

“நாங்கள் எந்தவொரு அமைப்பின் பிரதிநிதியையும் எதிர்க்கவில்லை, ஆனால் தரூர் எங்களுடன் கலந்துரையாடுவதற்குப் பதிலாக ஊடகங்களுடன் விவாதித்துள்ளார்.” என ரத்தோர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே,“ தரூரை நிலைக்குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.”

Advertisement

ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில் “ஆங்கிலத்தில் வெளிநாட்டு உச்சரிப்பில் பேசுவது பாராளுமன்ற நிறுவனங்களை புறக்கணிக்க எவருக்கும் உரிமை வழங்கிடாது.” என துபே குறிப்பிட்டுள்ளார்.

Advertisement