This Article is From Nov 28, 2019

''காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு தேசபக்தர்'' - நாடாளுமன்றத்தில் முழங்கிய பாஜக எம்.பி.!!

நாடாளுமன்றத்தில் இன்று SPG சிறப்பு பாதுகாப்பு படை திருத்த மசோதா தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. இதில் தமிழக திமுக எம்.பி. ஆ.ராசா பேசிக்கொண்டிருக்கையில் இடை மறித்த பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.

''காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு தேசபக்தர்'' - நாடாளுமன்றத்தில் முழங்கிய பாஜக எம்.பி.!!

பாஜக எம்.பி. பிரக்யா தாகூர்.

New Delhi:

காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு தேச பக்தர் என பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் நாடாளுமன்றத்தில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளத. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை திருத்த மசோதா தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் காரசாரமாக நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் திமுக எம்.பி. ஆ.ராசா, இந்த விவகாரத்தை காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேயுடன் இணைத்து பேசினார். 

அப்போது குறுக்கீடு செய்த பாஜக எம்.பி. பிரக்யா தாகூர், 'தேசபக்தரை (கோட்சேவை) நீங்கள் உதாராணமாக குறிப்பிட்டு பேசக் கூடாது' என்று பேசினார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. அவரை அமைதி காக்குமாறு சக பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். 

பிரக்யா தாகூர் பேசியதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தனது கருத்தை பிரக்யா திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். 

விவாதத்தின்போது ஆ.ராசா பேசுகையில், 'ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை வைத்ததால், மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே கொலை செய்தார். ஒருவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில்தான் SPG பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமே தவிர, அரசியல் காரணங்களுக்காக ஏதும் செய்யக் கூடாது' என்றார். 

.