This Article is From Jun 23, 2020

அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த பாஜக எம்.பி. பிரக்யா தாகூர்!

பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் சியாம பிரசாத் முகர்ஜிக்கு இன்று மரியாதை செலுத்தினர்.

அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த பாஜக எம்.பி. பிரக்யா தாகூர்!

மயங்கி விழுந்த பாஜக எம்.பி.க்கு மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டன.

Bhopal (Madhya Pradesh):

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக எம்.பி. பிரக்யா தாகூர், திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

பாஜகவின் முன்னோடியும், பாரதிய ஜனத சங்கத்தை தொடங்கியவருமான சியாம பிரசாத் முகர்ஜியின் நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, நாட்டின் பல்வேறு இடங்களில் பாஜக நிர்வாகிகள் சியாம பிரசாத் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் சியாம பிரசாத் முகர்ஜிக்கு இன்று மரியாதை செலுத்தினர்.

அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலம் போபால் பாஜக அலுவலகத்தில் அஞ்சலி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் சரிந்து விழுந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.

.