This Article is From Dec 14, 2018

நாடாளுமன்ற தேர்தல் வியூகங்களை வகுக்க ஜன.11,12-ல் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம்

கூட்டம் நடத்தும் தேதி கடந்த சில வாரங்களாக முடிவு செய்யப்பபடாத நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் வியூகங்களை வகுக்க ஜன.11,12-ல் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம்

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது.

New Delhi:

நாடாளுமன்ற தேர்தல் வியூகங்களை வகுக்கும் வகையில் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது.

நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாஜக 3 மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு கடும் பின்னடைவை அளித்திருக்கின்றன.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வியூகங்களை வகுக்கும் விதமாக பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கு கட்சி தலைவர் அமித் ஷா தலைமை தாங்குவார். டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக தற்போது ஆட்சியை இழந்திருக்கிறது. இந்த மாநிலங்களின் பாஜக தலைவர்களுடன் அமித் ஷா முக்கிய ஆலோசனைகளில் ஈடுபடுகிறார்.

பாஜகவை தவிர்த்து, அதன் பிற அமைப்புகளான இளைஞர்கள், பெண்கள், பட்டியல் பிரிவு, சிறுபான்மையினர் பிரிவு ஆகியவற்றின் தேசிய கவுன்சில் கூட்டம் டிசம்பர் 15-ல் இருந்து பிப்ரவரி 1-ம்தேதிக்குள் நடத்தி முடிக்கப்படுகிறது.

இந்த கூட்டங்களுக்கு பின்னர் மக்களவை தேர்தல் பணியில் பாஜக முழுவீச்சில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

.