This Article is From Sep 25, 2018

‘உயர் நீதிமன்ற அமர்வு தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர முடியாது’ - எச்.ராஜா

புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் கடந்த 16-ம்தேதி போலீசாருக்கும், எச். ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘உயர் நீதிமன்ற அமர்வு தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர முடியாது’ - எச்.ராஜா

தலைமை நீதிபதி மட்டுமே தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடரமுடியும் என்கிறார் எச். ராஜா.

Chennai:

உயர்நீதிமன்ற அமர்வு தாமாக முன்வந்து தன்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர முடியாது என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தலைமை நீதிபதியிடம் முறையிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் மெய்புரத்தில் கடந்த 16-ம்தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது. அப்போது நீதிமன்ற உத்தரவை சுட்டிக் காட்டி குறிப்பிட்ட சாலையின் வழியே ஊர்வலம் செல்லக்கூடாது என்று போலீசார் தடை விதித்தனர். அப்போது அவர்களுடன் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா வாக்குவாதம் செய்தார்.

அப்போது பேசிய ராஜா, போலீசார் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், காவல் துறையில் அதிகளவு முறைகேடு நடப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.டி. செல்வம் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து தொடர்ந்தனர். மேலும் வரும் 22-ம் தேதியன்று எச் ராஜா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணியிடம் முறையிட்ட எச். ராஜா. தன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்ற அமர்வுக்கு அதிகாரம் இல்லை என்று முறையிட்டார். இதுதொடர்பாக தலைமை நீதிபதி விரைவில் விசாரணை நடத்தவுள்ளார்.

.