டெல்லியில் தொகுதி பங்கீடு அறிவிப்பிற்கு பின்னர் அமித்ஷா, நிதிஷ் குமார் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான்.
New Delhi: 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனது கூட்டணி கட்சிகளுடனான தொகுதி உடன்பாடு குறித்து அறிவித்துள்ளது. பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஜனதாதளம் கட்சிகள் தலா 17 தொகுதிகளிலும், லோக்ஜனசக்தி 6 தொகுதிகளிலும் உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
லோக்ஜனசக்தியின் தொகுதி 4 லிருந்து, 6 மாநிலங்களவை தொகுதிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற மேல்சபை தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு இடம் அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அநேகமாக, மேல்சபை தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோருடன் இன்று டெல்லியில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா தொகுதி உடன்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தவர்கள், கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும் தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாஜக தலைமையிலான ஆட்சியில் ஒற்றுமையாக செயல்படுவோம், வெற்றிக்கான வீயூகம் வகுத்து 2019 தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.