This Article is From Mar 18, 2020

கொரோனா காரணமாக 1 மாதத்திற்கு பாஜக எந்த போராட்டத்தையும் நடத்தாது: ஜெ.பி.நட்டா

முன்னதாக, நேற்று நடந்த பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறு குழுக்களாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வைப் பரப்புமாறு எம்.பி.க்களைக் கேட்டுக்கொண்டார்.

கொரோனா காரணமாக 1 மாதத்திற்கு பாஜக எந்த போராட்டத்தையும் நடத்தாது: ஜெ.பி.நட்டா

ஒரு மாதத்திற்கு பாஜக எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுக்காது என நட்டா தெரிவித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • கொரோனா காரணமாக 1 மாதத்திற்கு பாஜக எந்த போராட்டத்தையும் நடத்தாது
  • மக்களிடம் விழிப்புணர்வைப் பரப்புமாறு எம்.பிக்களுக்கு மோடி வலியுறுத்தல்
  • பாஜகவினர் எந்தவொரு ஆர்ப்பாட்டத்தையும், தர்ணாவையும் தவிர்க்க வேண்டும்
New Delhi:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு மாதத்திற்கு பாஜக எந்தவொரு செயல் விளக்கம் அல்லது போராட்டத்தையும் நடத்த வேண்டாம் என பாஜக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார். 

முன்னதாக, நேற்று நடந்த பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறு குழுக்களாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வைப் பரப்புமாறு எம்.பி.க்களைக் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, கட்சியினர் ஏப்ரல் 15 வரை எந்தவொரு வெகுஜன போராட்டத்தையும் தவிர்க்க வேண்டும் என ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார். 

நேற்று நடந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எந்தவொரு ஆர்ப்பாட்டத்தையும், தர்ணாவையும் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதனைக் கருத்தில் கொண்டு அடுத்த ஒரு மாதத்திற்கு எந்தவொரு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தக்கூடாது என பாஜக முடிவு செய்துள்ளது. 

கட்சியின் நான்கைந்து அலுவலர்கள் "மக்கள் கூட்டத்தை" தவிர்ப்பதற்குத் தேவையான போதெல்லாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குக் குறிப்புகளைச் சமர்ப்பிப்பார்கள் என்றார்.

இந்த முடிவு குறித்து அனைத்து மாநில பிரிவுகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஒரு சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது என நட்டா கூறியுள்ளார். 

"அனைத்து கட்சி பிரிவுகளும் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன, மேலும் அவை சிறு குழுக்களாகச் செய்ய வேண்டியவை பற்றி விவாதிக்க வேண்டும். ஒருபுறம் நாம் நம்மைச் சுத்தமாக வைத்திருப்பதைப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

"சார்க் நாடுகளை உரையாற்றும் போது பிரதமர் கூறியது போல், கொரோனாவை எதிர்கொள்ள அச்சம் தவிர்த்து, தயாராவோம் என்று பிரதமர் மோடி கூறியது போல் நாமும் தயாராவோம் என்று நட்டா கூறினார்.

பட்ஜெட் அமர்வு குறைக்கப்படாது என்று தெளிவுபடுத்தும் அதே வேளையில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வைப் பரப்புமாறு பிரதமர் மோடி பாஜக எம்.பி.க்களை செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டார்.

மேலும், விமான ஊழியர்கள் மற்றும் கொரோனா வைரஸ் நெருக்கடி நிலையைச் சமாளிப்பதில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்களைப் பாராட்டினார், அவர்கள் நேர்மறையாகவும் அயராது உழைத்ததாகவும் கூறினார்.

கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காகப் பிரதமர் மோடி ஊடகங்களையும் பாராட்டினார்.

.