This Article is From Aug 17, 2020

‘ஃபேஸ்புக்கை கட்டுக்குள் வைத்திருக்கும் பாஜக’: அமெரிக்க ஊடக தகவலை சுட்டி காட்டி ராகுல் சாடல்!

ஆளும் கட்சியோ, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா ஊழலை மேற்கோள் காட்டி காங்கிரஸ் எங்களை பார்த்து விரல் காட்டக்கூடாது என்று பதிலடி கொடுத்துள்ளது.

‘ஃபேஸ்புக்கை கட்டுக்குள் வைத்திருக்கும் பாஜக’: அமெரிக்க ஊடக தகவலை சுட்டி காட்டி ராகுல் சாடல்!

ஹைலைட்ஸ்

  • The report has become latest flashpoint between Congress and BJP
  • Congress posted it as proof of BJP's alleged social media manipulation
  • BJP, citing a data scandal, said Congress should not point fingers
New Delhi:

பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சை முகநூல் கண்டுகொள்வதில்லை என்று வெளிநாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்று காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமூக ஊடகங்களை பாஜக கையாளும் முறையின் ஆதாரமாக இந்த கட்டுரையை காங்கிரஸ் வெளியிட்டுள்ள நிலையில், ஆளும் கட்சியோ, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா ஊழலை மேற்கோள் காட்டி காங்கிரஸ் எங்களை பார்த்து விரல் காட்டக்கூடாது என்று பதிலடி கொடுத்துள்ளது.

இதுதொடர்பாக, அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், வெறுப்பு பேச்சுகளை கண்டுகொள்ளாத பேஸ்புக் என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், ஆளும் பாஜவை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் வெற்று பேச்சு மற்றும் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை கண்டுகொள்வதில்லை என குற்றம்சாட்டியுள்ளது. 

பாஜகவினர் வெறுப்பு பேச்சை கண்டித்தால், நாட்டில் அந்நிறுவனத்தின் வணிக வாய்ப்பு பாதிப்புக்குள்ளாகும் என்று அந்நிறுவனத்தின் நிர்வாகி கூறியதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்களை மேற்கோள் காட்டி, முகநூல் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வருவது, பொருளாதாரத்தின் நிலை மற்றும் லடாக் வன்முறை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பாஜகவை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகிறார். 

அந்த வகையில், வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் கட்டுரையை மேற்கோள் காட்டிய ராகுல் காந்தி, இந்தியாவில் வாட்ஸ்அப், முகநூலை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்துகிறது. சமூகவலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. இறுதியாக முகநூலின் உண்மை நிலையை அமெரிக்க ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன என்று பதிவிட்டுள்ளார். 

தங்களது சொந்த கட்சியில் உள்ள தலைவர்களை கூட காப்பாற்ற முடியாதவர்கள் முழு உலகத்தையும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கட்டுப்படுத்துவதாக கூச்சலிடுகின்றனர். 

தேர்தலுக்கு முன்பாக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மற்றும் பேஸ்புக் உடனான கூட்டணி அமைத்து தரவுகளை பெற்று கையும் களவுமாக பிடிபட்ட நீங்கள், இப்போது எங்களை கேள்விக்குட்படுத்த வேண்டுமா என்று தகவல் தொடர்புத் துறையின் தலைவரான மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் காங்கிரஸூக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

.