Periyar - தமிழக பாஜக, தனது ட்விட்டர் பக்கத்தில் பெரியாரின் நினைவு தினத்தையொட்டி சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை இட்டுள்ளது.
Periyar - பகுத்தறிவு பகலவன் என்றும் திராவிட சித்தாந்தத்தின் ஆசானாகவும் பார்க்கப்படுகின்ற ஈ.வே.ராமசாமி என்னும் பெரியாரின் நினைவு தினம் இன்று. இதையொட்டிப் பல்வேறு பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பெரியாரின் நினைவைப் போற்றும் வகையில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக, தனது ட்விட்டர் பக்கத்தில் பெரியாரின் நினைவு தினத்தையொட்டி சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை இட்டுள்ளது.
“மணியம்மையின் தந்தை ஈவே.ராமசாமியின் நினைவு தினமான இன்று!!
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து, போக்ஸோ (Pocso) குற்றவாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதிகொள்வோம்,” என்று தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.