This Article is From Sep 09, 2018

அமித் ஷா தலைமையில் தேர்தலை எதிர் கொள்கிறது பா.ஜ.க: முக்கிய 10 குறிப்புகள்

பாரதிய ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நேற்று தொடங்கியது

அமித் ஷா தலைமையில் தேர்தலை எதிர் கொள்கிறது பா.ஜ.க: முக்கிய 10 குறிப்புகள்
New Delhi:

பாரதிய ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்துக்கு முன்னதாக கட்சியின் மாநில தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தேசிய தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். கூட்டத்தின் 10 முக்கிய குறிப்புகள்

  1. நரேந்திர மோடி தலைமையிலான அரசு ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை விரிவுபடுத்த செயலாற்றுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி ‘பிரெக்கிங் இந்தியா’வை நோக்கி செயலாற்றுகிறது என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
  2. 2014–ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை விட, 2019–ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக கட்சி வெற்றிபெறும் என கூறினார்.
  3. பீமா கோரேகான் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நாவிஸ் நடவடிக்கை எடுத்ததற்கு அமித்ஷா வாழ்த்து தெரிவித்தார்.
  4. இந்தக் கூட்டத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்களும் உறுப்பினர்களும் பங்கேற்றனர். “அஜெய் பா.ஜ.க” (வீழ்த்த முடியாத பா.ஜ.க) என்பதை முழக்கமாகவும் இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
  5. 5 மாநிலங்களில் நடக்க இருக்கும் தேர்தலில் கடுமையாக உழைக்குமாறு அமித்ஷா, கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக தெலுங்கானா மாநில தேர்தலில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
  6. ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டங்கள் உருவாக்கியது போன்ற அம்சங்களை முன்னிலைப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
  7. அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இந்த கூட்டம் நடைப்பெற உள்ளது.
  8. மோடி அரசின் ஊழலற்ற முகம், பொருளாதாரத்தை வெற்றிகரமாக கையாண்டதன் மூலம் 8.2 சதவீத உள்நாட்டு வளர்ச்சி பெற்றது போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
  9. தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம், மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் பாஜக தலைவர்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளார்கள்.
  10. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்தும் இந்த செயற்குழுவில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

.