This Article is From Dec 24, 2018

மக்களவை தேர்தலுக்காக வாட்ஸப் குரூப்களை ஆரம்பிக்கும் பாஜக

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதனை எதிர்கொள்வது தொடர்பான வியூகங்களை பாஜக வகுத்து வருகிறது.

மக்களவை தேர்தலுக்காக வாட்ஸப் குரூப்களை ஆரம்பிக்கும் பாஜக

டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பேசியுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • டெல்லியில் பூத் கமிட்டி தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது
  • ஒவ்வொரு பாஜக தொண்டரும் குறைந்தது 10 குடும்பங்களிடம் ஆதரவு திரட்ட வேண்டும்
  • ''அரவிந்த் கெஜ்ரிவாலால் டெல்லியே இருமிக் கொண்டிருக்கிறது''- பியூஷ் கோயல்
New Delhi:

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதனை எதிர்கொள்வது தொடர்பான வியூகங்களை பாஜக அமைத்து வருகிறது. தற்போது வாட்ஸப் குரூப்களை அமைத்து அதன் மூலமாக பிரசாரங்களை மேற்கொள்வதற்கு பாஜக திட்டமிட்டிருக்கிறது.

இதுகுறித்து பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் ராம் லால் கூறுகையில், ''தொடர் சங்கிலி போன்ற வாட்ஸப் குரூப்கள் ஏற்படுத்தப்படும். இந்த ஒவ்வொரு குழுவிலும் தேசிய தலைவர்கள் இடம்பெறுவார்கள். வரும் ஜனவரி மாதத்திற்குள் இந்த பணி முடிவடைந்து விடும். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பாஜக தொண்டர்கள் அங்குள்ள மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும்'' என்றார்.

டெல்லியில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா உள்பட மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது, ஒவ்வொரு தொண்டர்களும், குறைந்தது 10 குடும்பங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், வாரம் ஒருமுறை இவ்வாறு செய்யும்போது குறைந்தது 25 லட்சம் புதிய குடும்பங்களிடம் ஆதரவு திரட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொகுதி, பகுதியில் உள்ள சக்திவாய்ந்த மக்களின் விவரங்களையும் தொண்டர்களிடம் பாஜக கேட்டிருக்கிறது. முந்தைய தோல்விக்கான காரணங்கள் குறித்து பூத் பொறுப்பாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், வரும் தேர்தல்களில் தோல்வியை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கூட்டத்தின்போது பேசிய மத்திய அமைச்சர் விஜய் கோயல், ''முன்பெல்லாம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு தான் இருமல் வரும். இப்போது டெல்லி முழுவதுமே இருமிக் கொண்டிருக்கிறது. இதற்கு ஆம் ஆத்மி அரசுதான் முக்கிய காரணம்'' என்று கூறியுள்ளார்.

.