இரண்டு இடங்களிலும் பாஜக எளிதாக வெற்றி பெற்றுவிடும்.
ஹைலைட்ஸ்
- மாநிலங்களவையில் உள்ள இரண்டு காலியிடங்களுக்கு இன்று தேர்தல்
- ஜெய்சங்கர் மற்றும் ஜுகலாஜி தாகூர் ஆகியோர் பாஜக சார்பில் களமிறக்கம்
- இரண்டு இடங்களிலும் பாஜக எளிதாக வெற்றி பெற்றுவிடும்.
New Delhi: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அமித்ஷா மற்றும் ஸ்மிர்தி இரானி ஆகியோர் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவர்கள் இருவரும் தங்களது குஜராத் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து, காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
இதில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஜுகலாஜி தாகூர் ஆகியோரை பாஜக களமறிக்கியுள்ளது. காங்கிரஸ் சந்திரிகா சுதாசமா மற்றும் கவுரவ் பாண்டே ஆகியோரை களமிறக்கியுள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி மாலை முடிகிறது. தொடர்ந்து, முடிவுகளும் இன்று மாலையிலே அறிவிக்கப்படுகிறது.
இரு இடங்களுக்கும் தனி தனியாக தேர்தல் நடக்கும் நிலையில், பாஜக இரு இடங்களிலும் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. காங்கிரஸ் இப்படி தனித்தனியாக தேர்தல் நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது இரண்டு இடங்களிலும் பாஜக வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதேபோல், இரு இடங்களிலும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், அதில் ஒன்றை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கட்சி நம்புகிறது.
குஜராத் சட்டப்பேரவையில், பாஜகவுக்கு 100 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு 71 உறுப்பினர்களும் கொண்டுள்ளது. இதில், வெற்றிபெறுவதற்கு 50 சதவீத வாக்குகளை பெற்றால் போதுமானது. இன்றைய தேர்தலில் வெற்றி பெற, தலா ஒவ்வொரு உறுப்பினரும் 88 வாக்குகளை பெற வேண்டும்.
இந்த தேர்தலில் கட்சி மாறி வாக்களிப்பதை தடுக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சுமார் 65க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினமே சொகுசு விடுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.