This Article is From Jan 03, 2020

குழந்தைகள் இறப்பை வைத்து பாஜக கவனத்தை திசை திருப்புகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு

பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களை எதிர்கொண்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் வியாழக்கிழமை ட்விட் செய்திருந்தார்

குழந்தைகள் இறப்பை வைத்து பாஜக கவனத்தை திசை திருப்புகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு

கடந்த மாதத்தில் 100 குழந்தைகளுக்கு மேல் இறந்துள்ளனர்.

New Delhi:

ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் ஜே.கே.லோன் மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த நிலையில் அந்த இறப்பை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே “ பாஜக கட்சி முக்கிய பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறது. இறப்பு குறித்த விஷயத்தில எந்த அரசியலும் இல்லை. முதலமைச்சர் மத்திய சுகாதார அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக” தெரிவித்துள்ளார்.

“மருத்துவமனையில் குழந்தைகள் இறந்ததற்கு நாங்கள் வருத்தமடைகிறோம். முதலமைச்சரும் வருத்தமடைந்து சுகாதார அமைச்சரை கோடாவுக்கு அனுப்பியுள்ளார்” என்று அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அவினாஷ் பாண்டேவை வரவழைத்து இறப்பு குறித்து கவலை அறிவுறுத்தியிருந்தார்.

பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களை எதிர்கொண்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் வியாழக்கிழமை ட்விட் செய்திருந்தார்: “மத்திய அரசின் சிறப்பு பிரதிநிதிகள் குழுவை நான் வரவேற்கிறேன். ராஜஸ்தானை ‘ஆரோக்கியமாக' ஆக்குவதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது. குழந்தைகள் இறப்பு குறித்து அரசாங்கம் முக்கியத்துவம் கொண்டு செயல்படுகிறது அதில் அரசியல் ஏதும் இருக்கக் கூடாது. மேலும் கோட்டாவில் இறப்பு விகிதம் குறைந்து விட்டது” என்று தெரிவித்தார். 

2011 ஆட்சிக் காலத்தில் ஐசியூ பிரிவு நிறுவப்பட்டதாக கூறினார். 

.