Read in English
This Article is From Dec 12, 2018

'மக்கள் பாஜகவுக்கு ''முத்தலாக்'' கொடுத்துவிட்டனர்'- சசி தரூர்

ஆளும் பா.ஜ.க அரசுக்கு மிகவும் மோசமான தோல்வியாக அமைந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து பல எதிர்க்கட்சி தலைவர்கள் மோடி அரசை கேலி செய்தனர்.

Advertisement
இந்தியா Posted by

சசி தரூர் எழுதிய ‘தி பாராடாக்சிகல் பிரைம் மினிஸ்டர்' என்னும் புத்தகம்.

New Delhi:

டெல்லி: ஆளும் பா.ஜ.க அரசுக்கு மிகவும் மோசமான தோல்வியாக அமைந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து பல எதிர்க்கட்சி தலைவர்கள் மோடி அரசை கேலி செய்து வருகின்றனர்.

அதில் பா.ஜ.க கட்சியால் அதிகபடியாக விமர்சனத்துக்கு உள்ளான காங்கிரஸ் எம்.பி சசி தரூரும் மோடியை கேலி செய்துள்ளார். ‘நரேந்திர மோடி அரசை (ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில்)  மக்கள் இஸ்லாமிய நடைமுறைப்படி (முத்தலாக்) விவாகரத்து கோரியுள்ளனர்' என கேலி செய்தார்.

சசி தரூருக்கு எதிராக பல தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தி வந்தது பா.ஜ.க அரசு. சில வாரங்களுக்கு முன்னர் தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணமடைந்ததற்கு, சசி தரூர்தான் காரணம் என்னும் அவர் ஒரு கொலையாளி என, மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார். அதை தொடர்ந்து அவருக்கெதிராக  அவதூறு வழக்கை சசி தரூர் தாக்கல் செய்தது  குறிப்பிடத்தக்ககது.

Advertisement