বাংলায় পড়ুন Read in English
This Article is From Dec 08, 2018

கருத்துக்கணிப்பு முடிவு : 3 மாநிலங்களில் ஆட்சியை இழக்கும் பாஜக

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில் தேர்தல் முடிந்துள்ளது. இதுதொடர்பான கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.

Advertisement
இந்தியா
New Delhi:

5 மாநில  தேர்தல் முடிந்துள்ள நிலையில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் பாஜக ஆட்சியை இழக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

நாடு முழுவதும் பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் முதல் இன்று வரை  மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்  நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 

பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன. இந்த  நிலையில்,  5 மாநிலங்களில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் பாஜக ஆட்சியை இழக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

இதுமத்தியில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. மிசோரத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என்றும், தெலங்கானாவில் ஆளும் சந்திர சேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

மத்திய பிரதேசத்தை பொறுத்தவரையில் இழுபறி நீடிக்கும் என்றும், குறைந்த வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறலாம் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. இதுதொடர்பான 10 கருத்துக்கணிப்புகளில் பாஜக 110 தொகுதிகளிலும், காங்கிரஸ் 109 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம். இங்கு ஆட்சியை பிடிக்க 115 இடங்கள் தேவை. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 இடங்கள் கிடைக்கலாம்.

சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தளவில் மொத்தம் உள்ள 90 இடங்களில் பாஜகவுக்கு 41 இடங்கள் வரை கிடைக்கலாம். காங்கிரஸ் கட்சி 43 இடங்களில் வெல்ல  வாய்ப்பிருக்கிறது. அஜித்ஜோகி - மாயாவதி கூட்டணிக்கு 4 சீட்டுகள் கிடைக்க கூடும். இங்கு பெரும்பான்மை பெறுவதற்கு 46 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

ராஜஸ்தானில் 199 இடங்களில் தேர்தல் முடிந்துள்ளது. மெஜாரிட்டிக்கு 100 இடங்கள் தேவை. இங்கு காங்கிரஸ் 110 இடங்களில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது. பாஜக 78 இடங்களில் வெல்லலாம். இதனை 12 நிறுவனங்கள் கணித்திருக்கின்றன. 

தெலங்கானாவில் சந்திர  சேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்புள்ளன. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் அக்கட்சி 67 இடங்களை  கைப்பற்றக்கூடும். சந்திரபாபு நாயுடு - காங்கிரஸ் கூட்டணிக்கு 39 இடங்கள் வரை கிடைக்கலாம். பாஜக 5 இடங்களில் வெல்ல  வாய்ப்பிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் 4 மாநிங்களில்  மிசோரமும் ஒன்று. இங்கு காங்கிரசின் ஆட்சி முடிவு பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அக்கட்சி மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 16-ல் மட்டுமே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.என்.எஃப் கட்சிக்கு 18 இடங்கள் வரை கிடைக்கும். 

Advertisement
Advertisement