வெகுஜன மக்களுக்கு ராகுல் காந்தி மீது ஆர்வம் இல்லை என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
Coimbatore: ஊழல் கட்சிகளுடன் ஒருபோதும் பாஜக கூட்டணி வைக்காது என்றும் 2019 மக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்காக இன்னும் கூட்டணிக் கட்சிகளை உருவாக்கும் பணியில் பாஜக ஈடுபடவில்லை. சரியான நேரத்தில் இது குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என கோவையில் செய்தியாளர்களிடம் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
22 மாநிலங்களை ஆளும் ஒரு கட்சி, தமிழகத்தில் நிச்சயம் கணிசமான இடங்களில் வெற்றி பெறும் என்றும் ஊழல் கட்சிகளுடன் ஒருபோதும் பாஜக கூட்டணி வைக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் வழங்கியபவர்களுடன் பாஜக ஒருபோதும் கூட்டணி வைக்காது என அவர் கூறினார்.
கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஆர்.கே.நகர் தேர்தலில் போது டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், வெற்றி பெற்ற பின்னர் பணம் தருவதாக கூறி 20 ரூபாய் டோக்கன் வழங்கினர் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தேசிய அரசியலை பொறுத்தவரையில், எந்த கூட்டணி கட்சிகளும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
வெகுஜன மக்களுக்கு ராகுல் காந்தி மீது ஆர்வம் இல்லை என்றும், மோடியுடன் போட்டியிடுவதற்கு அவர் ஏற்றவர் இல்லை, மக்களும் அவரை பிரதமராக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என அவர் கூறியுள்ளார்.